Friday, July 25, 2025

வாழ்க்கை?

தொலை தூர வெளிச்சமாய் நீ !
உன்னை தேடியே என் பயணம் இனி....!

இரங்கல் கடிதம்

ஒரு முடிந்துபோன தொடக்கம் ...
========================

மண்ணில் விழுவதற்கு முன்பே
மாய்ந்து போனவனே
மரணம் என்பது உன் பெயரோ ?

மலர்ந்ததும் உதிர்வதில்லை
மலர்கள்
மலரும் முன்னரே உதிர்ந்து விட்டாயே

ஏக்கம் தான் ...

உன்னை
ஈன்றவளின் முகத்தை கூட தரிசிக்க
கொடுப்பினை இல்லை

வருத்தம் தான்...

வெளிச்சத்தின் முகவரி கூட அறிய
வாய்ப்பே இல்லாமல்
இருளிலேயே முடிந்து போனது - உன்
சகாப்தம் ....

இருளை மட்டுமே நீ நேசித்திருப்பாய் கவலைப்படாதே
இருளானது தான்
இந்த
இழிவான சமுதாயமும் ...

மண்ணாள பிறந்த நீ
மண்ணினுள்
மாய்ந்து போனாய் ...

கனக்கிறது நெஞ்சம்...

ஆறறிவு படைத்த
மிருகங்களுக்கு இடையே
வாழ்வதை விட
இறந்து - நீ
புனிதன் ஆனாய் ...


உன் தாயை
ஒரு கோடி கனவுகள்
சுமந்திட செய்தவன் நீயே ...

உன் இறப்பினால்
அவளின் சந்தோசத்தை வேரோடு
புதைத்தவனும் நீயே ...

ஜனனமும் மரணமும்
ஒரே பொழுதில்
அரங்கேறிவிட்டது - உன்
வாழ்வில்...

கருவறையில் இருந்த போதே
கல்லறை கட்டியவனா நீ ?

எழுதபடாத உன் சரித்திரத்தை
எண்ணி வருந்துவதா!

இல்லை

பழி பாவம் நிறைந்த
பாவ பூமியில்
அகப்படாமல் விடுதலை அடைந்தாய் என்று
எண்ணி மகிழ்வதா

இருளில் தொடங்கி
இருளிலேயே
இன்பமாய் முடிந்தது - உன்
இதிகாசம் ....


மரணத்திற்கு
வயதில்லை இருந்தாலும் - உன்
மரணத்தின்
வயது ஏற்க முடியாததே !

தொடங்கும் முன்பே முடிந்து போன
உன் வாழ்க்கை
எண்ணி வருந்துவதால்
உன் இறுதி ஊர்வலத்தில்
இனங்காமலே
பயணிக்கின்றது - என்
மனசு ...

இருளை வென்று
இறைவனடி சேர்கிறாய்
இனி எங்கு அவதரிப்பாய்
இந்த உலகம் ஆள ..?

எதிர்காலம் !

அடுத்த வினாடி என்பதில் எனக்கு உடன்பாடில்லை- 
இந்த நொடி என்பதே நிரந்தரம் இல்லாத உலகத்தில் பயணித்து கொண்டிருப்பதால் ....!"

வேண்டுதல்

விரதம் இருப்பின் வேண்டுதல் நிறைவேறும் எனில்

சாப்பிட உணவின்றி  பட்டினியாய் இருப்பவர்களின் வேண்டுதல்கள் ஏன் நிறைவேற்றப்படவில்லை...

கடவுளே!!!

தனிமை..!

தனிமை என்பதை சாபம் என்றார்கள் ..
தவறான கூற்று ...
தனிமை என்பதுஎன்பது வரமே....
தக்க துணை அமையாத போது .....!